ராஜிவ் கொலையின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்: சுப்ரமணியன் சுவாமி

  Newstm Desk   | Last Modified : 15 Jun, 2018 03:36 pm

subramanian-swamy-tweet-about-president-rejects-tamil-nadu-s-plea-to-release-rajiv-case-convicts

ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு குடியரசுத்தலைவரிடம் மனு அளித்தது. மத்திய உள்துறை அமைச்சகம், குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளது. இதற்கு மாநிலங்களவை உறுப்பினரும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக அரசின் சட்டவிரோத தீர்மானத்தை குடியரசுத்தலைவர் நிராகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் தூக்குத்தண்டனையில் இருந்து தப்பித்துள்ளது அவர்களது அதிர்ஷ்டம். ராஜிவ் கொலைவழக்கில் முக்கிய தலையாய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார். மேலும், அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்" என குறிப்பிட்டுள்ளார். இவரது பெரும்பாலான பதிவுகள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்த பதிவு பல்வேறு தரப்பினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close