அரசியல் காழ்புணர்ச்சி எதற்கு?- கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொதிப்பு

  Padmapriya   | Last Modified : 17 Jun, 2018 10:34 pm

not-on-strike-being-victimised-delhi-s-ias-officers-tell-media

அரசியல் லாபத்துக்காக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தங்களிடம் காழ்புணர்ச்சி காட்டுவதாகவும், அதிகாரிகள் யாரும் ஸ்டிரைக் செய்யவில்லை என்றும் டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், ஆளுநர் மாளிகையில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அதிகாரிகள் யாரும் அரசுப் பணிகள் செய்யாமல் இருப்பதால், பல கோப்புகளும் திட்டங்களும் கிடப்பில் கிடப்பதாக டெல்லி ஆளுநரிடம் முறையிட அவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது மணிஷா சக்சேனா என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பேசும்போது, "ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதாக கூறப்படும் தகவல்கள் அனைத்தும் பொய். அனைத்து துறையிலும் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறோம். விடுமுறை நாட்களிலும் பணியாற்றி வருகிறோம். தலைமை செயலர் தாக்கப்பட்டது அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை. பணிகள் எதுவும் தடைபெறவில்லை" என்றார். 

போக்குவரத்து செயலர்வர்ஜா ஜோஷி கூறுகையில், "நாங்கள் எங்களது பணியை செய்து வருகிறோம். நாங்கள் பழிவாங்கப்பட்டதாக உணர்கிறோம். அரசியல் காரணங்களுக்காக எங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. எனது தனிப்பட்ட நற்பெயர் மற்றும் அதிகாரி என்ற முறையில் எனக்கு உள்ள நற்பெயரை கெடுக்க வேண்டும் என அரசியல் கட்சி என் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி எல்லை மீறுகிறது" என்றார்.

டெல்லியில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்க முதல்வர்கள் சந்தித்து பேசி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close