ம.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை: மாயாவதி

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 03:03 pm

bsp-says-no-alliance-with-congress-may-contest-alone-on-230-seats

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வரின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவரும் பா.ஜ.கவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன.

தற்போது பா.ஜ.கவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி வைப்பது அதிகமாக ஒர்க்அவுட் ஆகி வருகிறது. சமீபத்தில் நடந்த கர்நாடகத் தேர்தல், இடைத்தேர்தல்கள் இதற்கு சிறந்த உதாரணம். இந்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸுடன், பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர்  மாயாவதி மறுத்துள்ளார்.

அவர், "மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் 230 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். காங்கிரஸ் உடனான கூட்டணி என்று பேசப்படுவது உண்மையல்ல. இதுவரை யாருடனும் கூட்டணி குறித்து விவாதிக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியும் கட்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன" என்றார்.

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பாளர் மனக் அகர்வால் தெரிவிக்கையில், "காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜுடன் கூட்டணி என கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஒத்த மற்ற கட்சிகளிளுடன் கூட்டணி குறித்து பேசப்படலாம். இதுவரை எந்த கட்சியின் பெயரையும் நாங்கள் குறிப்பிடவில்லை" என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close