காவிரி மேலாண்மை ஆணையம் உருவாவதில் சிக்கல்?

  Newstm Desk   | Last Modified : 18 Jun, 2018 04:16 pm
is-karnatka-opposed-to-form-cauvery-management-authority

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமலே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என  கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.இதனால் காவிரி மேலாண்மை ஆணையம் உருவாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகளுக்கு பிறகு, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வெளியிட்டது இறுதியாக 'காவிரி மேலாண்மை வாரியம்' என்பதற்கு பதில் 'காவிரி மேலாண்மை ஆணையம்' அமைக்க மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. இதையடுத்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைப்பிற்கான உறுப்பினர்களை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அரசுகள் அறிவித்துவிட்டன. ஆனால் கர்நாடகா அரசு இதுவரை உறுப்பினர் பட்டியலை அறிவிக்கவில்லை. கடந்த 12ம் தேதிக்குள் உறுப்பினர்களை அறிவிக்குமாறு கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. காலக்கெடு முடிந்தும் உறுப்பினர்களை கர்நாடக அரசு அறிவிக்கவில்லை. 

இதைத்தொடர்ந்து இன்று குமாரசாமி  பிரதமர் மோடி, நீர்வளத்துறை செயலர் யு.பி.சிங் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து பேசுகிறார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் சட்டம் 1956ன் படி நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும். நாடாளுமன்ற ஒப்புதல் பெறாமலே ஆணையத்திற்கான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது" என தெரிவித்தார். இதனால் காவிரி மேலாண்மை ஆணையம்  அமைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close