ராஜீவ் குடும்பத்துக்கும் புலிகளுக்கும் தொடர்பு?- சுப்பிரமணியன் சாமி கேள்வி

  PADMA PRIYA   | Last Modified : 13 Mar, 2018 11:50 am

கொலையாளிகளை மன்னிப்பதாக கூறும் ராகுல் காந்தி ஒரு நிஜ தேசியவாதியா என சுப்பிரமணியன் சாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில், தனது தந்தையை கொலை செய்தவர்களை தானும், தனது சகோதரி பிரியங்காவும் மன்னித்து விட்டதாக செய்தியாளர்களிடம் கூறினார். ராகுலின் இந்த மனமாற்றமும் அதனை அவர் வெளிப்படையாக கூறியதையும் அடுத்து சிறையில் உள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க அவர் ஒப்புக்கொள்வாரா என்ற ரீதியிலான விவாதங்கள் அரசியல் மேடையில் எழத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், பாஜக மூத்தத் தலைவரும் ராஜீவ் கொலை வழக்கில் தன்னை சாட்சியமாக இணைத்துகொண்டவருமான சுப்பிரமணிய சாமி ராகுல் காந்தி மீது பல அடுக்கடுக்கான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, "ராகுல், ஒரு நிஜ தேசியவாதி தானா? தங்களுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அணுப்பியதால் ராஜீவை கொன்றதாக விடுதலை புலிகள் இயக்கமே கூறிய பின், கொலையாளிகளை மன்னிப்பதாக கூறுவது எப்படி தேசபக்தி கொண்டவர் செய்யும் செயலாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில், கொலையாளிகளுக்கு எந்தக் கருணையும் காட்டக்கூடாது.

இதைத் தவிர வேறு கேள்விகளும் எனக்கு உண்டு, ராஜீவ் கொலை வழக்கில் நளினிக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டயாக குறைக்கப்பட்டது ஏன்? நளினியை பிரியங்கா, சிறைக்கு சென்று சந்திக்க வேண்டியதன் அவசியம் தான் என்ன?

பிரிட்டனில் உள்ளா நளினியின் மகளின் படிப்புக்கு சோனியா காந்தி ஏன் உதவ வேண்டும். சிறையில் உள்ள நளினியின் படிப்பிற்கு இந்திரா காந்தி பல்கலைக்கழகம் மூலம் உதவியது எதற்காக? ஏன் கொலைக் குற்றவாளிகளுக்கு இவ்வளவு இறக்கம் காட்ட வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. தங்களது குடும்ப நபரைக் கொன்ற கொலையாளிகளாக மட்டுமே இவர்களை அணுகக் கூடாது. தேச திரோகிகளாக தான் பார்க்க வேண்டும். இந்த வகையில் இணக்கம் காட்டி வருவது எனக்கு வேறு சில சந்தேகங்களை தோற்றுவிக்கிறது. விடுதலைப் புலிகளுக்கும் காந்தி குடும்பத்துக்கு தொடர்பு இருக்கிறது என்ற சந்தேகமும் உள்ளது" என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சாமி.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close