காஷ்மீர் எம்.எல்.ஏ-க்களுடன் அமித் ஷா ஆலோசனை: ஆட்சி கவிழ்கிறது!

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 04:39 pm

kashmi-bjp-withdrawing-alliance-with-ruling-party

காஷ்மீரில் சமீப காலமாக பிரிவிணைவாத குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசுவது, பாகிஸ்தான் கொடியை ஏற்றுவது, அந்நாட்டின் தேசிய கீதத்தை இசைத்து மரியாதை செலுத்துவது என்று நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மத்திய - மாநில அரசுகளின் கொள்கைகள் காரணமாகத்தான் இதுபோன்ற செயல்கள் அதிகரித்து வருவதாக மக்கள் கருத ஆரம்பித்தனர்.

இதற்கிடையே, காஷ்மீரில் மனித உரிமை மீறல் தொடர்பாக உலக நாடுகள் கவலை தெரிவித்தது. இது இந்திய அரசுக்கு மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது. இதனால் ஆளும் மக்கள் ஜனநாய கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதனால், ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற சூழல் நிலவியது. இந்த சூழலில் இன்று காலை காஷ்மீரில் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, காஷ்மீரில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி ஆளும் பிடிபி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக பா.ஜ.க. தலைவர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். இதனால், அங்கு ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. மெகபூபா அரசுக்கு தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் இணைந்து ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மை கிடைக்கும். இப்போதைய சூழலில் இதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கப்படும் என்றே தெரிகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close