• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

காஷ்மீர்: ஆளும்கட்சி பி.டி.பியுடனான கூட்டணியை வாபஸ் பெற்றது பா.ஜ.க

  Newstm Desk   | Last Modified : 19 Jun, 2018 03:25 pm

bjp-pulls-out-of-j-k-government-ends-alliance-with-pdp

காஷ்மீரில் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறி ஆளும் பி.டி.பி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பா.ஜ.க

பா.ஜ.க தலைவர் அமித் ஷா தலைமையில் இன்று காஷ்மீர் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் காஷ்மீர் மாநில தலைவர் ராம் மாதவ், "பி.டி.பி உடன் கூட்டணியை நீடிக்க முடியாத நிலையில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்கள் அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் இருக்கிறது. 

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது. மேலும் தீவிரவாதமும் வன்முறையும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக கருத்துக்களை கூற முடியவில்லை. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்" என்றார். 

பா.ஜ.க.வின் இந்த முடிவுக்குறித்து அம்மாநில கவர்னருக்கு அக்கட்சியின் சார்பில் கடிதம் அனுப்பப்ட்டுள்ளது. தற்போது 87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் 25 தொகுதிகள் பா.ஜ.க, 28 தொகுதிகள் பி.டி.பியிடம் உள்ளது. தற்போது பா.ஜ.க ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக மெகபூபா முப்தி தலைமையிலான ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 44 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் 15 தொகுதிகள் கொண்ட தேசிய மாநாட்டு கட்சியும், 12 தொகுதிகளை கொண்ட காங்கிரசும் ஆதரவு கொடுத்தால் பி.டி.பி ஆட்சி தப்பிக்கும். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close