8 நாள் போராட்டத்தை முடித்துக் கொண்டார் கெஜ்ரிவால்!

  Newstm News Desk   | Last Modified : 19 Jun, 2018 06:56 pm

kejriwal-ends-sit-in-protest-after-8-days

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களுடனான முக்கிய சந்திப்புகளை புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்ட புதுடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார். 

கடந்த பிப்ரவரி மாதம் முதல் டெல்லி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களை சந்திக்க மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். டெல்லி துணைநிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசின் ஆதரவுடன் அவர்கள் டெல்லி அரசை செயல்பட  விடாமல் செய்வதாக கெஜ்ரிவால் கூறினார். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களது பணிக்கு திரும்பும் வரை துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார் கெஜ்ரிவால். 

போராட்டம் 8 நாட்களாக நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தவிர மற்ற எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவாலின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், துணை நிலை ஆளுநர், கெஜ்ரிவாலுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, இன்று போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லி அமைச்சர் மனீஷ் சிசோடியா, "ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிக்கு திரும்புகின்றனர்" என ட்வீட் செய்து இதை உறுதிபடுத்தினார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close