ராஜினாமாவுக்கு பின் மெஹபூபா முஃப்தி  பேட்டி! 

  சுஜாதா   | Last Modified : 20 Jun, 2018 05:25 am

mehbooba-mufti-resigns-after-bjp-breaks-alliance-with-pdp

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி(பிடிபி) உடனான கூட்டணியில் இருந்து பா.ஜ.க விலகியதை அடுத்து, காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி  தனது ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அனுப்பினார்.

ராஜினாமா செய்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் மெஹபூபா முஃப்தி கூறியதாவது:- பாஜக கூட்டணி முறிந்ததிலும், முதல்வர் பதவி பறிபோனதிலும் எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. ஏனென்றால், அதிகாரத்திற்காக இந்த கூட்டணி அமைக்கவில்லை. மிகப்பெரிய கனவை செயல்படுத்தவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது. இருதரப்பு போர்நிறுத்தம், மோடியின் பாகிஸ்தான் பயணம், 11 ஆயிரம் இளைஞர்கள் மீதான வழக்குகள் வாபஸ் ஆகியவை நடந்துள்ளது.

எனது ராஜினாமா கடித்தத்தை கவர்னரிடம் சமர்பித்தேன். மேலும், எந்த கூட்டணிக்கும் முயற்சிக்கவில்லை எனவும் அவரிடம் தெரிவித்தேன். காஷ்மீர் மீதான பாதுகாப்பு கொள்கை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close