ஆந்திர அரசின் ஆலோசகரும், நிர்மலா சீதாராமன் கணவர் திடீர் ராஜினாமா

  சுஜாதா   | Last Modified : 20 Jun, 2018 06:29 am

ap-govt-advisor-and-nirmala-sitharaman-s-husband-resigns

ஆந்திர அரசின் ஆலோசகரும், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரக்கலா பிரபாகர் தனது பதவியை திடீர் என்று ராஜினாமா செய்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த ஆந்திர மாநில அரசு ஆந்திராவுக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. இதையடுத்து சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதால் சமீபத்தில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் கட்சி முறித்துக்கொண்டது.
    
இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல்  ஆந்திர அரசு ஆலோசகர் பதவி வகித்து வந்த  ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் பரக்கலா பிரபாகர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, மோடி  அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள  சந்திரபாபு நாயுடு, ராணுவ மந்திரியின் கணவரை முக்கிய பதவியில் நீடிக்க விட்டிருப்பது ஏன்? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்ததை தொடர்ந்து பரக்கலா பிரபாகர் ராஜினாமா செய்துள்ளார். 

இதுகுறித்து சந்திரபாபு நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:  "நான் ஆலோசகராக நீடிப்பதால், மத்திய அரசுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டின் உண்மைத்தன்மை மீது சந்தேக நிழல் படியக்கூடும். எனவே, எனது மனசாட்சியின் வற்புறுத்தலால், உங்களின் விருப்பத்துக்கு மாறாக நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். 

பரகல பிரபாகரின் பதவிக்காலம் ஜூலை 4-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close