மரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன் - கமல்ஹாசன்

  Newstm Desk   | Last Modified : 20 Jun, 2018 05:47 pm

kamal-haasan-meets-congress-leader-rahul-gandhi

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். 

கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்த சமயத்தில் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களை  சந்தித்தார். சமீபமாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்த்தித்து பேசினார். இன்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்று தனது கட்சிப்பெயரை பதிவு செய்தார். இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

இதையடுத்து மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் இல்லத்தில் வைத்து கமல்ஹாசன் அவரை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர், "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கூட்டணி குறித்து ராகுலிடம் எதுவும் பேசவில்லை" என்று கமல் கூறினார். ராகுலும், "கமலுடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது" என தெரிவித்துள்ளார்.

 

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close