கமலுடன் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட்!

  சுஜாதா   | Last Modified : 21 Jun, 2018 06:26 am
raghul-gandhi-tweet-about-kamalhassan-meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை சந்தித்தது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டர்  பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை நடிகரும் மக்கள் நீதி கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று மாலை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த தீடிர் சந்திப்பு குறித்து பல்வேறு தரப்பினரும், பல்வேறு விமர்சனங்களை கூறி வரும் நிலையில், இந்த சந்திப்பு  குறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "காங்கிரஸ் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்பாகவும், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் கமல்ஹாசனிடம் பேசினேன். இந்த சந்திப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது"  என்று பதிவு செய்துள்ளார். 
முன்னதாக, சந்திப்பு குறித்து  கமல்ஹாசன் செய்தியாளர்களிடம்  "இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கூட்டணி குறித்து ராகுலிடம் எதுவும் பேசவில்லை"  என்று கூறியது குறிப்பிடத்தக்கது.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close