டெல்லியில் சோனியா காந்தியுடன் கமல் சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 21 Jun, 2018 12:45 pm

mnm-founder-kamal-haasan-meets-sonia-gandhi-in-delhi

டெல்லியில் இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்  சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார் கமல்ஹாசன். 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்று தனது கட்சிப்பெயரை பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின்னர், "மரியாதை நிமித்தமாக ராகுலை சந்தித்தேன். தேர்தல் கூட்டணி குறித்து ராகுலிடம் எதுவும் பேசவில்லை" என்று கமல் தெரிவித்தார். ராகுலும், "கமலுடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது, மகிழ்ச்சியளிக்கிறது.தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்து பேசினோம்" என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று ராகுலை சந்தித்ததைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை, கமல் சந்தித்து பேசியுள்ளார். டெல்லியில் உள்ள சோனியா காந்தி இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பானது நடைபெற்றது. சந்திப்பு முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டின் ஜனநாயக நிலை மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து பேசினோம். கூட்டணி குறித்து பேசவில்லை" என தெரிவித்தார். 

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.