கர்நாடகாவில் கொடூரம்...பா.ஜ.க நிர்வாகி மர்மநபர்களால் வெட்டிக்கொலை!

  Newstm Desk   | Last Modified : 23 Jun, 2018 12:07 pm

karnataka-bjp-executive-murdered-by-unknown-group

கர்நாடக மாநிலம் சிக்மகலூரில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர் மர்மநபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா சிக்மகலூர் நகர பொதுச் செயலாளர் முகம்மது அன்வர். இவர் நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் கவுரி கலுவ் பகுதியில் வந்த போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் கத்தி, அரிவாள் கொண்டு அவரை வெட்டியதாக தெரிகிறது. இதில் அன்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மட்டுமல்லாமல் பா.ஜ.கவினரிடையும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close