ஜூலை 18 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 02:23 pm

monsoon-session-of-parliament-to-be-held-from-18th-july-to-10th-august

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது என உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்துவது குறித்து இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. இதில் ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ்கோயல், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். ஆலோசனை முடிவில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 18ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.  ஓபிசி பிரிவினருக்கான தேசிய ஆணையம்,முத்தலாக் திட்ட மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள், திட்டங்கள் இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close