• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

அணிவகுப்பில் மயங்கி விழுந்த ராணுவ வீரர்; நலம் விசாரித்த பிரதமர் மோடி

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 03:04 pm

pm-modi-inquires-about-health-of-iaf-guard-who-collapsed-at-rashtrapati-bhavan

குடியரசுத்தலைவர் மாளிகையில், செஷல்ஸ் நாட்டு அதிபரை வரவேற்கும் நிகழ்ச்சியில், மயங்கி விழுந்த ராணுவ வீரரை பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.

செஷல்ஸ் நாட்டின் அதிபர் டேனி ஃபவுரே 6 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று டெல்லி வந்திறங்கிய அவருக்கு இந்தியா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இருவரும் இணைந்து அதிபரை வரவேற்றனர்.

மேலும், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் டெல்லியில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார். இந்த நிலையில், உடனடியாக அவருக்கு சிகிச்சை உதவி அளிக்கப்பட்டது. செஷல்ஸ் அதிபரை வரவேற்கும் விழா முடிந்த பிறகு, பிரதமர் மோடி அந்த ராணுவ வீரரின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிகழ்வு அங்குள்ளவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

டெல்லியில் தற்போது வழக்கத்தை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close