கார்த்தி சிதம்பரத்தின் ஜாமினுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!

  Newstm Desk   | Last Modified : 25 Jun, 2018 05:00 pm
inx-media-case-cbi-moves-sc-against-bail-granted-to-karti-chidambaram-by-delhi-hc

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியதற்கு எதிராக சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு விதிமுறைகளை மீறி, அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. பின்னர் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. அடுத்தடுத்து ஜாமின் நீடிக்கப்பட்ட நிலையில், கார்த்தி சிதம்பரத்தின்  ஜாமினுக்கு எதிராக சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலும் கார்த்தி சிதம்பரம் ஜாமின் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அதேபோன்று, முன்னதாக ப.சிதம்பரத்தை விசாரணை செய்ய சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என்ற நோக்கில் ப.சிதம்பரம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு அளித்து அந்த வழக்கில், ஜூலை 3ம் தேதி வரை வரை கைது செய்ய நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close