நீரவ் மோடி வங்கி மோசடி வழக்கில் சிக்கியுள்ள 54 அதிகாரிகள்!

  Newstm Desk   | Last Modified : 28 Jun, 2018 11:36 am
pnb-finds-54-officials-at-fault-in-nirav-modi-scam

நீரவ் மோடியின் வங்கி மோசடி வழக்கில் 54 அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி செய்த விவகாரம் வெளியே வந்ததையடுத்து அவர் தலைமறைவாகினார். நீரவ் மோடியின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டதில் ஏகப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தற்போது வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நீரவ் மோடியை இந்தியா கொண்டு வர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் முயற்சி எடுத்து வருகிறது. 

நீரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கப்பட்ட போதும் அவர் போலி பாஸ்போர்ட்டுகளை உபயோகித்து வெளிநாடுகளில் சுற்றி வருவதாகவும், தற்போது லண்டனில் அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து சிபிஐ மற்றும் புலனாய்வுப்பிரிவு நீரவ் மோடியை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறது. இதற்காக இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய மூன்று நாடுகளின் உதவியை இந்தியா கோரியுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அந்த நாடுகளுக்கு கடிதம் எழுதி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் உதவியையும் சிபிஐ நாடியுள்ளது.

இதையடுத்து, நீரவ் மோடியின் இந்த மோசடியில் வங்கிக்கிளை மேலாளர்கள் உள்பட 54 பேர் இதில் ஈடுபட்டுள்ளதாக சிபிஐ  விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த 54 பேரில், 10 வங்கிக்கிளை மேலாளர்கள், 7 பேர் வட்ட தலைமை அதிகாரிகள், 5 மண்டல மேலாளர்கள், 5 ஆடிட்டர்கள், அந்நிய செலவாணி தலைமை அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களில் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், மீதியுள்ள நபர்களை கைது செய்து விசாரணை செய்யும் பணியில் சிபிஐ இறங்கியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close