முன்னாள் பிரதமர் தேவே கவுடா தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு!! 

  சுஜாதா   | Last Modified : 02 Jul, 2018 04:58 am

deve-gowda-meets-telangana-cm-k-chandrasekhar-ra

ஐதராபாத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் தேவே கவுடா,  தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பேசியுள்ளார். 

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில்  ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பாக   மேற்கு வங்காள முதல்வர் மம்தா பாணர்ஜி,   திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போன்றோரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனை தொடர்ந்து,  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி உள்ளிட்ட பல மாநில கட்சிகளுக்கும் சந்திரசேகர் ராவ் அழைப்பு விடுத்திருந்தார். 
இந்நிலையில், ஐதராபாத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள முன்னாள் பிரதமர் தேவே கவுடா, அங்கு   தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்து பேச்ச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பை, சந்திசேகர் ராவ் மகனும், தகவல் தொழில்நுட்ப துறை மந்திரியான கே டி ராமா ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.    

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close