'மத்திய - மாநில அரசுகளை தேர்வு செய்ய ஓரே தேர்தல்'

  Padmapriya   | Last Modified : 03 Jul, 2018 05:58 pm
law-panel-to-consult-parties-over-one-nation-one-election-on-july-7

நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் சட்ட ஆணையம் வரும் வாரத்தில் ஆலோசனை நடத்த உள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலுடன், மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநிலக் கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவதை முன்னிட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 

இந்த யோசனைக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால், அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து பாதியளவு மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களுக்கு 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுடனும் சேர்த்து தேர்தலை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு எடுத்துள்ளது. 
ஆனால் பா.ஜ.க தலைமையிலான பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரள எதிர்க்கட்சிகள் யூகித்து வரும் நிலையில், ஓரே தேர்தல் முறைக்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர அவகாசம் இருக்காமல் பார்த்துகொள்ள பிரதமர் மோடி காய் நகர்த்துவதாக குற்றம்சாட்டப்படுகிறது. 

இதனிடையே பா.ஜ.க நடத்தியிருக்கும் ஆய்வு ஒன்றின்படி, 2009ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ரூ. 1,115 கோடியும் 2014ல் ரூ. 3,870 கோடியும் என தேர்தலுக்காக பெருமளவு பணம் செலவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சட்டப்பேரவைத தேர்தல் செலவை பார்க்கும்போது இந்தத தொகைக்கும்  பன்மடங்கு அதிகமாக செலவாகும் எனவும் கூறியுள்ளது. 

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத மாநிலங்களை, ஓரே தேர்தல் என்ற யுக்தி மூலம், மக்கள் மனதில் மத்தியிலும் மாநிலத்திலும் ஓரே நிலைப்பாடு என்ற கண்ணோட்டத்தை உருவாக்க முயற்சி செய்யும் என்ற சந்தேகமும் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close