நான் மிகப்பெரிய அரசன் அல்ல: பிரதமர் மோடி 

  சுஜாதா   | Last Modified : 04 Jul, 2018 06:12 am
i-am-not-a-shahenshah-or-an-imperious-ruler-modi

நான் மிகப்பெரிய அரசனோ அல்லது ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட ஆட்சியாளனோ அல்ல என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 

சுயராஜ்யா என்னும் ஆன்லைன் இதழுக்கு பிரதமர் மோடி நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதில் பிரதமர் மோடியிடம், எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பிரதமர் மோடி கூறுகையில், “நான் எங்கு பயணம் செய்தாலும் பல்வேறு சமூகம் மற்றும் அனைத்து வயதினரையும் கொண்ட ஏராளமான மக்களை சந்திக்கிறேன். தெருக்களிலும், வீதிகளிலும் திரண்டு மக்கள் எனக்கு வரவேற்பு அளிக்கும்போது என்னால் காரில் வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது.

ஏனென்றால் நான் மிகப்பெரிய அரசன் இல்லை. ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட ஆட்சியாளனோ அல்ல. அப்படி இருந்தால்தான் மக்களின் அன்பும், அரவணைப்பும் இன்றி ஒதுங்கி இருக்க முடியும். நான் அப்படிப்பட்டவன் அல்ல. அதனால் மக்களின் அன்பு எப்போதும் என்னை பாதிக்காது. அவர்கள் அளிக்கும் ஆதரவு எனக்கு மிகுந்த பலத்தை தருகிறது” என்று பதில் அளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close