வெளிநாட்டு கேர்ள் ஃப்ரெண்ட்ஸலாம் மீட் பண்ண முடியாது: சசி தரூரை கலாய்த்த சு.சுவாமி!

  Newstm Desk   | Last Modified : 05 Jul, 2018 04:43 pm
tharoor-can-t-meet-his-overseas-girlfriends-now-says-swamy-after-bail-order

ஜாமீன் கிடைத்தாலும் சசி தரூர் தனது வெளிநாட்டு கேர்ள் ப்ரெண்ட்ஸை மீட் பண்ண முடியாது என சுப்பிரமணியன் சுவாமி கிண்டல் செய்துள்ளார். 

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சசி தரூர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான இன்றைய விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, "இந்த ஜாமீன் கிடைத்ததில் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. அவர் தற்போது திகார் சிறையில் இல்லை. ஆனால் முன்னதா முன்ஜாமீன் பெற்ற ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் அமர்ந்துகொள்ளலாம். அதே நேரத்தில் அவர் வெளிநாடு செல்லவும் முடியாது. வெளிநாட்டில் உள்ள அவரது பெண் தோழிகளை பார்க்க முடியாது" என கிண்டலாக தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close