ஜோதிடர் கூறியதால் தினமும் 300 கி.மீ தூரம் பயணிக்கும் ரேவண்ணா!

  முத்துமாரி   | Last Modified : 05 Jul, 2018 06:26 pm

hd-revanna-travels-350km-daily-to-escape-bad-luck-in-benga

கர்நாடக அமைச்சர் ரேவண்ணா, தினமும் 300 கி.மீ தூரம் பயணித்து பெங்களூரூ வருகிறார். இதற்கு ஜோதிடம் தான் காரணம் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தேவகவுடாவின் மூத்த மகனும், கர்நாடக முதல்வர் குமாரசாமியின் அண்ணனுமான ரேவண்ணாவுக்கு சொந்தமாக பெங்களூருவில் பல வீடுகள் உள்ளன. இருந்தும் அவர் வெற்றி பெற்ற தொகுதியான ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹாலிநரசிபுரா பகுதியில் இருந்து சுமார் 300 கிமீ தூரம் காரில் பயணித்து தான் கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிறார். இதற்கான பெட்ரோல் செலவு அனைத்தையும் அரசே ஏற்றுக்கொள்கிறது. அவர் தினமும் காலை 5 மணிக்கு எழும்பி, பூஜைகளை முடித்து, தொகுதி மக்களை சந்தித்து விட்டு, 8 மணிக்கு புறப்படுவார். காலை 11.30 மணிக்கு பெங்களூரு வந்து அமைச்சர் பணிகளை மேற்கொள்கிறார். மீண்டும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு நேரத்தில் வீடு திரும்புகிறார். 

இதற்கு அவர் கூறும் காரணம் என்னவென்றால், அரசு தரப்பில் இருந்து அமைச்சர்களுக்கு இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை. அதன் காரணமாகவே தான் சொந்த தொகுதியில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். 

ஆனால் உண்மையான காரணம் என்றால் ஜோதிடம் தானாம். ஆம், ரேவண்ணா ஜோதிடம் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். தான் செய்யும் சின்ன சின்ன விஷயத்திற்கு கூட நல்ல நேரம் பார்த்து தான் செய்வாராம். ராகு காலத்தில் எந்த செயலையும் செய்யமாட்டாராம். ஜோதிடரின் அறிவுரைப்படி, அவர் குறித்த நேரத்தில் தான் அமைச்சராக பொறுப்பேற்றதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பெங்களுருவில் தான் தேவகவுடா, குமாரசாமியின் வீடுகள் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அரசு அளிக்கும் வீட்டில் இருந்துகொள்ளலாம் என்றும் ஜோதிடர் கூறி உள்ளார். ஆனால், ரேவண்ணா மேற்கு குமார பூங்கா என்ற இடத்தில் உள்ள அரசு வீடு தான் வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். ஆனால் அந்த வீட்டில் தற்போது முன்னாள் அமைச்சர் மகாதேவப்பா தங்கி இருக்கிறார். அவர் வீட்டை காலி செய்ய 3 மாதம் கால அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதுவரை ரேவண்ணாவின் இந்த பயணம் தொடரும் என அவரது நெருங்கிய சொந்தங்கள் தெரிவிக்கின்றனர். ரேவண்ணாவின் இந்த செயலை கர்நாடக மக்கள் பலரும் கிண்டலடித்தும், திட்டியும் வருகின்றனர். ஆனால் ரேவண்ணாவோ, ஜோதிடம், ஆன்மீகத்தினால் தான் தங்களது குடும்பத்தில் உள்ளோருக்கு ஆட்சி செய்யும் அதிகாரம் வந்துள்ளதாக தெரிவித்து வருகிறார். 

தம்பிக்கு(குமாரசாமி) கிடைச்சா என்ன.. அண்ணனுக்கு(ரேவண்ணா) கிடைச்சா என்ன?...

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.