உ.பியில்  ஜூலை 15 முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்த தடை: யோகி அதிரடி  

  சுஜாதா   | Last Modified : 07 Jul, 2018 08:00 am
uttar-pradesh-plastic-ban-from-july-15

உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் வருகிற ஜூலை 15 முதல்  பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்த தடை விதித்து யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'ஜூலை 15-ம் தேதியில் இருந்து பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள் ஆகியவற்றை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை அமல்படுத்துவதற்கு பொதுமக்களாகிய நீங்கள் நல்லமுறையில் ஒத்துழைக்க வேண்டும்' என கூறியுள்ளார்.  

முன்னதாக,  கடந்த 2015-ம் ஆண்டில் உ.பியில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடைபெற்றபோது, பிளாஸ்டிக் கைப்பை மற்றும் இதர பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களை தயாரிக்கவும், விற்கவும்  தடை விதிக்க பட்டது. எனினும், இந்த உத்தரவு அங்கு பரிபூரணமாக கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close