2014-ல் சுஷ்மா சுவராஜ் பிரதமாராகி இருக்க வேண்டும்: ப.சிதம்பரம் பரபரப்பு கருத்து  

  சுஜாதா   | Last Modified : 09 Jul, 2018 12:42 pm
sushma-swaraj-should-have-been-prime-minister-in-2014-says-chidambaram

வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தான் 2014-ம் ஆண்டு பிரதமாராகி இருக்க வேண்டும் என ப.சிதம்பரம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதிய கட்டுரையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குறித்து தெரிவித்துள்ளார். அதில், சுஷ்மா சுவராஜ்தான் 2014ம் ஆண்டில் பிரதமராகி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2009 - 2014ஆம் ஆண்டு வரை மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் அப்போதே பிரதமர் வேட்பாளராக உறுதி செய்யப்பட்டார். ஆனால், 2014ஆம் ஆண்டு தேர்தலில் அதீத ஆற்றல் மற்றும் அரசியல் தந்திரம் மிக்க ஒருவர் (மோடி)  பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவரை எதிர்த்து அத்வானியும், சுஷ்மாவும் போராடி தோல்வியை கண்டனர்.  தேர்தலுக்குப் பின் சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார். அந்தப் பதவியில் இப்போதுவரை சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஆனால் இதைக்கூட சில நேரங்களில் பிரதமர் அலுவலகம் ஆள்கிறது.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பது,சிறையில் உள்ள இந்தியர்களை விடுவிப்பது, பாஸ்போர்ட், விசா கோரி உதவி கேட்கும் இந்தியர்களுக்கு உதவுவது, இந்திய பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகளில் அனுமதி கேட்பவர்களுக்கு உதவுவது என சுஷ்மா தனது பணியை மிகவும் 'ஸ்மார்ட்டாக' செய்து வருகிறார் என ப.சிதம்பரம் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close