புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவர்  வெங்கையா நாயுடு!!

  சுஜாதா   | Last Modified : 11 Jul, 2018 09:40 am

shri-m-venkaiah-naidu-becomes-first-chairman-of-rajya-sabha-to-sign-an-mou

இந்தியா, ருவாண்டா ஆகிய  இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் நட்பை முன்னெடுத்துச் செல்ல பன்முகத் தன்மை கொண்ட மாகாண மற்றும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்புக்களின் பரஸ்பர நலனை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவர் ஆகிறார் திரு. எம் வெங்கையா நாயுடு 

|  76 ஆண்டு காலத்தில் முதன்முறையாக மாநிலங்களவை அயல்நாட்டு அவையோடு, நாடாளுமன்றங்களுக்கு இடையேயான உரையாடலை முன்னெடுத்துச் செல்ல வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

|  திரு வெங்கைய நாயுடு இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் ருவாண்டா குடியரசின் பிரதிநிதிகள் சபை தலைவர் திரு. பர்னார்ட் மக்குஸாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இதுபோன்றதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் மாநிலங்களவையின் முதல் தலைவரானார்.

|  நாடாளுமன்றங்களுக்கு இடையேயான உரையாடலை முன்னெடுத்துச் செல்வது, நாடாளுமன்ற ஊழியர்களின் திறனை மேம்படுத்துவது, மாநாடுகள், கருத்தரங்கங்கள், கூட்டங்கள், பணியாளர்களுக்கான நிகழ்ச்சிகள், பயிலரங்கங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை ஏற்பாடு செய்வது.  இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் நட்பை முன்னெடுத்துச் செல்ல பன்முகத் தன்மை கொண்ட மாகாண மற்றும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்புக்களின் பரஸ்பர நலனை உருவாக்குவது ஆகியவையே இந்த ஒப்பந்தத்தின் ஆறு கூறுகளாகும்.

|  பரஸ்பர நலனுக்கான ஒத்துழைப்பு குறித்த வாய்ப்புகள் மற்றும் இருநாடுகளின் நலன் குறித்து திரு. நாயுடுவும், திரு மக்குஸாவும் விவாதித்தனர். 

|  ஆப்பிரிக்க கண்டத்தின் தாராளமய வர்த்தக உடன்பாட்டுக்கு வகை செய்த தலைநகர் கிகாலியில் மார்ச் மாதம் நடைபெற்ற ஆப்பிரிக்க ஒன்றியத்தின் சபைக் கூட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது மற்றும் சென்ற ஜனவரியில் ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டத்திற்கு தலைமையேற்க தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ருவாண்டாவுக்கு திரு. நாயுடு தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.

|  ருவாண்டாவில் சுமார் 10 லட்சம் பேர் பலியானதற்கு காரணமான  நாட்டின் இனப்படுகொலை கொள்கைக்கு பொறுப்பானவர்களை கண்காணிப்பதிலும், தண்டனை வழங்குவதிலும் ருவாண்டா பிரதிநிதிகள் சபையின் சிறப்பு பங்களிப்பை விவரித்தார் திரு மக்குஸா.  அது மட்டுமல்லாது இந்த அமைப்பு சமூக நீதித் திட்டங்களின் செயல்பாட்டை கண்காணிப்பதையும் அவர் எடுத்துக் கூறினார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.