பா.ஜ.க வெற்றி பெற்றால், இந்தியா, 'இந்து பாகிஸ்தான்' ஆகி விடும்: சசி தரூரின் சர்ச்சை பேச்சு!

  Newstm Desk   | Last Modified : 12 Jul, 2018 11:07 am
if-bjp-wins-2019-lok-sabha-elections-india-will-be-hindu-pakistan-shashi-tharoor

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், இந்தியா என்பது 'இந்து பாகிஸ்தான்' ஆகி விடும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசியிருப்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் சிறுபான்மையினருக்கான உரிமைகள் மறுக்கப்படும்.  அவர்கள் பாகிஸ்தானை போன்று ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவார்கள். தொடர்ந்து வெற்றி பெற்றால் இந்திய நாடு என்பது இந்து பாகிஸ்தானாக மாறி விடும்.  மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் போன்ற தலைவர்கள் எதற்காகப் போராடினார்களோ அது இல்லாமலே போய்விடும்" என பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.பியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், "காங்கிரஸ் எம்.பி கூறியதற்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். பாகிஸ்தான் ஊறுவதற்கு முதல் காரணமே காங்கிரஸ் தான். காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவையும், இந்து மக்களையும் இழிவுபடுத்தும் நோக்கில் பேசுகின்றனர்" என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close