கட்சியை உடைக்க நினைத்தால் பா.ஜ.க கடும் விளைவுகளை சந்திக்கும்: மெஹபூபா எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 12:50 pm
if-bjp-tries-to-break-pdp-outcome-will-be-dangerous-mehbooba-mufti

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியை உடைக்க நினைத்தால் பா.ஜ.க கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில், கடந்த 2014ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்த கட்சியும் கூட்டணிக்கு ஒத்து வராததால் சிறிது காலம் குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்ற நிலையில், பா.ஜ.க - மக்கள் ஜனநாயக கட்சி(பி.டி.பி) இணைந்தது. எதிரும் புதிருமான இந்த கட்சிகளிடையே முரண்பாடுகள் இருந்தாலும், வேறு வழியில்லாமல் ஆட்சி நடைபெற்று வந்தது.

பின்னர், காஷ்மீரில் தொடர்ந்து மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றும், எல்லையில் தலைதூக்கி ஆடும் தீவிரவாதத்தை  ஒடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் பா.ஜ.க குற்றம் சாட்டி வந்தது. இதையடுத்து, பி.டி.பியுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக கடந்த ஜூன் 17 அன்று பா.ஜ.க அறிவித்தது. தொடர்ந்து காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி தனது பதவியை அன்றைய தினமே ராஜினாமா செய்தார்.  இதனால் அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, தற்போது பி.டி.பி கட்சியின் தலைவர் மெஹபூபா முப்திக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் செயல்படுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி முறிவுக்கு மெஹபூபா முப்தியின் பேராசை தான் காரணம் என கூறிவருகின்றனர். பா.ஜ.கவினர் தான் இவர்களை இதுபோன்று கிளப்பி  பேசப்படுகிறது. 

இதனையடுத்து, மெஹபூபா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், "ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியை உடைக்க நினைத்தால் அவர்கள் விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். மாநிலங்களில் தீவிரவாதம் இன்னும் மேலோங்கும். மேலும், சலாஹூதீன், யாசின் மாலிக்  போன்றவர்கள் மீது நானும் யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்படும்" என எச்சரித்துள்ளார். 

87 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28, பா.ஜ.க-வுக்கு 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 தொகுதிகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close