பிரதமர் மோடி உ.பி.யில் இன்று பிரசாரம் தொடங்குகிறார்!!

  சுஜாதா   | Last Modified : 14 Jul, 2018 07:30 am

pm-narendra-modi-visit-to-uttar-pradesh

நாடாளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் மோடி உத்தரபிரதேசத்தில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய உள்ளார். 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இதன் முதற்கட்டமாக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடியும் மக்கள் ஆதரவை பெற இன்று முதல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன் முதற்கட்டமாக மோடி முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசி சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் நடைபெற கூட்டங்களில் மோடி பிரசாரம் செய்ய இருக்கிறார். 

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக கூட்டங்களில் பங்கேற்று மோடி பேசினார். அதுபோல், இந்த தடவையும் மோடி உத்தரபிரதேசத்தில் உள்ள தொகுதிகளை குறிவைத்து பிரசாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close