வங்கதேசம் சென்றுள்ள ராஜ்நாத் சிங் ட்விட்டர் பதிவு!! 

  சுஜாதா   | Last Modified : 14 Jul, 2018 08:24 am

rajnath-singh-arrives-bangladesh-and-his-tweet

மூன்று நாள் சுற்றுப்பயணமாக வங்காள தேசம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இருநாடுகளுக்கிடையே உள்ள நட்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, "இந்தியா மற்றும் வங்காளதேச நாடுகளுக்கிடையேயான உறவு மொழி, கலாச்சாரம், ஜனநாயகம் என அனைத்து விதத்திலும் வரலாற்று தொன்மை மிக்கது. வங்காளதேசத்துடன் நட்புறவு மேற்கொள்வதற்கு இந்தியா மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உள்துறை அமைச்சக மூத்த நிர்வாகிகளுடன் மூன்று நாள் பயணமாக வங்காளதேசம் சென்றடைந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத், இரு நாடுகள் தொடர்பான பாதுகாப்பை பலப்படுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.  மேலும் இச்சுற்றுப் பயணத்தில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை சந்திக்கும் ராஜ்நாத் சிங், பயங்கரவாத எதிர்ப்பு, எல்லை தாண்டி கள்ள நோட்டுகள் அதிகரித்தல் குறித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். மேலும்  ரோஹிங்யா பிரச்சனை குறித்த பேச்சு வார்த்தையும் நடைபெறும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close