பதவியை ராஜினாமா செய்ய தயார்: முதலமைச்சர் உருக்கம்!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 15 Jul, 2018 12:12 pm
ready-to-resign-as-cm-kumarasamy

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார். 

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து முதல்வராக பதவி ஏற்றவர் குமாரசாமி. காங்கிரஸ் கட்சி பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. அவரது பதவிக்கு நெருக்கடி ஏற்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ விஷகாந்த் போல் நான் விஷத்தை விழுங்கி விட்டேன். நான் மகிழ்ச்சி இல்லை. நான் முதல்வராக இருப்பதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். ஆனால், நான் மகிழ்ச்சியாக இல்லை. முதல்வர் பதவி என்பது ரோஜாப்பூ படுக்கை அல்ல.

முட்கள் நிறைந்த படுக்கை. லட்சியங்கள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் பணியாற்ற வேண்டும். பா.ஜ.கவின் தாக்குதல்களை எதிர்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டும். எனது கட்சியான ம.ஜ.த-வின் லட்சியங்களையும் நிறைவேற்ற வேண்டும். முதல்வர் பதவி இப்படியே எனக்கு நெருக்கடிகள் கூடினால் எந்த நேரத்திலும் முதல்வர் பதவியை விலக நான் தயாராக உள்ளேன். ஆட்சி, அதிகாரத்துக்காக நானில்லை. விவசாயிகளையும் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவே முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன். 

எனது கட்சி தனி பெரும்பான்மை பெரும் அளவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதில் எந்த மாநிலத்துக்கும் விருப்பம் இல்லை, அக்கறை இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் எத்தனை நெருக்கடி கொடுத்தாலும் நான் அளித்த வாக்குறுதியை காப்பாற்றி விட்டேன் எனப் பேசினார். அவரது இந்தப்பேச்சு காங்கிரஸ் கட்சியின் நிபந்தனைகளால் வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close