வெங்காயம் எப்படி வளரும் என்றே ராகுலுக்கு தெரியாது: சிவ்ராஜ் சிங் சவுகான் விமர்சனம் 

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 01:40 am
rahul-gandhi-doesn-t-even-know-how-onion-grows-shivraj-singh-chouhan

வெங்காயம் மண்ணுக்கு மேல் வளருமா அல்லது கீழ் வளருமா என்று கூட ராகுல்காந்திக்கு தெரியாது என மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் விமர்சித்துள்ளார். 

மத்திய பிரதேசம் உஜ்ஜயினி பகுதியில் பாஜக சார்பில் ஜன் ஆசிர்வாத் யாத்திரையை பாஜக தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறுகையில், ''மண்டசூர் பகுதிக்கு சமீபத்தில் வருகை புரிந்த ராகுல்காந்தி, விவசாயிகளிடம் கலந்துரையாடியுள்ளார். அப்போது விவசாயிகளிடம் தான் பிரதமராக தயாராக இருப்பதாக கூறியுள்ளார். முதலில் அவரை யார் பிரதமர் ஆக்குவார்? அவருக்கு மிளகாய் மேல்நோக்கி வளருமா அல்லது கீழ்நோக்கி வளருமா, வெங்காயம் தரைக்கு மேல் வளருமா அல்லது தரைக்கு கீழ் வளருமா என்று விவரம் கூட தெரியாது'' எனக் கடுமையாக விமர்சித்தார். 

மத்திய பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 6  விவசாயிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்தக் சம்பவத்தின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்தே  ''ராகுல்காந்திக்கு வெங்காயம் எப்படி வளரும் என்று கூட தெரியாது''  என்று கடுமையாக விமர்சித்துள்ளார் சிவ்ராஜ் சிங் சவுகான்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close