ராகுலை அவதூறாக பேசிய பகுஜன் சமாஜ் கட்சி துணைத்தலைவர் நீக்கம்: மாயாவதி அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 05:20 pm
bsp-chief-mayawati-has-sacked-party-s-national-coordinator-jai-prakash-singh-from-his-post

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத்தலைவரை நீக்கி மாயாவதி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத்தலைவர் ஜெய் பிரகாஷ் சிங். இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்ப்பதற்கு வெளிநாட்டவர் போல் இருக்கிறார். ராகுல் காந்தி அவரது அப்பாவை விட அம்மாவையே ஒத்திருக்கிறார். இதனால் அவர் பிரதமராவது என்பது நடக்காத ஒன்று. அவர் தேர்தலில் வெற்றி பெற முடியாது. மேலும், மோடி Vs ராகுல் என்பதற்க்கு பதிலாக மோடி Vs மாயாவதி என்று கூறலாம்" என பேசியுள்ளார். 

இதையடுத்து, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக பேசியதால், ஜெய் பிரகாஷ் சிங் பதவி நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். தொடர்ந்து அவர், "காங்கிரஸ் கட்சி ஒரு தேசிய கட்சி. ஒரு தேசிய கட்சியின் தலைவரை அவதூறாக பேசுவது என்பது கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது. எனவே ஜெய் பிரகாஷ் சிங் கட்சியின் துணைத்தலைவர் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்படுகிறார்" என விளக்கம் அளித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close