சத்தியமா என் அழுகைக்கு காங்கிரஸ் காரணம் இல்லைங்க - குமாரசாமி குமுறல்

  சுஜாதா   | Last Modified : 18 Jul, 2018 09:55 am

i-did-not-speak-anything-against-the-congress-kumaraswamy

"நடந்தது எங்கள் கட்சியின் குடும்ப விழா, அதில் நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்.  நான் காங்கிரஸ் கட்சியையோ, அதன் தலைவர்களின் பெயர்களையோ சொல்லி அழவில்லை. என் கண்ணீருக்கு காங்கிரஸ் காரணம் இல்லை" என கர்நாடக முதல்வர் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.  

பெங்களூர்: கடந்த  சனி கிழமை மதசார்பற்ற ஜனதா தளம்(மஜத) கட்சியின் சார்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது குமாரசாமி பேசுகையில்,  "நீங்கள் எல்லோரும் உங்கள் சகோதரர் முதல்வராகி விட்டதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள், ஆனால் நான் சந்தோஷமாக இல்லை. நான் வலிகளை தாங்கி கொண்டு இருக்கிறேன். நான் தேர்தலுக்கு முன்பு சென்ற இடத்தில் எல்லாம் மக்கள் அவ்வளவு அன்பை காட்டினர். ஆனால், வாக்களிக்கும் போது என்னை மறந்துவிட்டனர்" என்று உணர்ச்சிகரமாக பேசிக்கொண்டே கண்ணீர்விட்டு அழுதார்.

குமாரசாமி அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, “குமாரசாமியின் கண்ணீருக்கு காங்கிரஸே காரணம். கூட்டணி ஆட்சியின் பெயரால் அவரை துன்புறுத்துகிறார்கள். மேலும் அவரது நடிப்பு ஹிந்தி சினிமா பார்த்தது போல் உள்ளது" என்றார். இதனை தொடர்ந்து, பலர் குமாரசாமியை நக்கல் செய்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். 

இந்நிலையில், இது குறித்து பேசிய குமாரசாமி, "அது எங்கள் கட்சியின் கூட்டம். எனவே நான் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுவிட்டேன். நான் காங்கிரஸ் கட்சியின் பெயரையோ, அதன் தலைவர்களின் பெயர்களையோ எதையும் குறிப்பிட்டு பேச வில்லை. இதற்கு முன்புகூட காங்கிரஸ் குறித்து தவறாக பேசவில்லை. ஆனால் ஊடகங்கள் இதை காங்கிரஸுடன் ஒப்பிட்டு, எனது பேச்சை ஊதிப் பெரிதாக்கிவிட்டது. என் கண்ணீருக்கு காங்கிரஸ் காரணம் இல்லை. கூட்டணி ஆட்சியில் எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று தனது கண்ணீருக்கு விளக்கம் அளித்துள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close