மாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசி தெறிக்கவிட்ட வெங்கையா நாயுடு!!

  சுஜாதா   | Last Modified : 19 Jul, 2018 05:32 am
venkaiah-naidu-spoke-in-10-different-languages-in-rajya-sabha

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று மாநிலங்களவையில் அதன் தலைவர் வெங்கையா நாயுடு 10 மொழிகளில் பேசினார்.

ஜூலை 18ம் (நேற்று) முதல் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடக்க இருக்கிற இக்கூட்ட தொடரில் வழக்கமாக ராஜ்யசபா எம்.பிக்கள் இதுவரை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  தற்போது, கூடுதலாக 5 மொழிகளில் மொழி பெயர்ப்பு வசதி அளிக்கப்பட்டுள்ளது. அதை மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு அறிவித்தார். அப்போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி ஆகிய 10 மொழிகளில் சில வார்த்தைகள் பேசினார். 

மேலும்,  மொழி பெயர்ப்பு வசதியைப் பெற உறுப்பினர்கள் முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று வெங்கையா நாயுடு கூறினார். அப்போது சுப்பிரமணிய சாமி, சமஸ்கிருத வார்த்தைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close