இந்தியா மற்றும் கானா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து!!

  சுஜாதா   | Last Modified : 19 Jul, 2018 09:11 am

india-ghana-discuss-development-cooperation

இந்தியா மற்றும் கானா நாட்டின் இடையிலான உறவினை வலுப்படுத்தும் விதமாக இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

நான்கு நாட்கள் அரசு சுற்று பயணமாக நேற்று(புதன் கிழமை) இந்தியா வந்துள்ள கானா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி ஷெர்லி போச்வே, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கு இடையே வளர்ச்சியில் ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு கலாச்சார ஒத்துழைப்பு  குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியா மற்றும் கானா இடையிலான உறவினை வலுப்படுத்துவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 

இந்த சந்திப்பு குறித்து  வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ராவிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் முக்கிய பங்காளர்களில் மேற்கு ஆப்பிரிக்காவில் கானாவும் ஒன்றாகும். ​​கானாவில் இந்தியா இரண்டாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. இரு நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தகமானது 3.5 பில்லியன் டாலர்களாக உள்ளது. தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close