புருவ அழகி பிரியா வாரியரை கலங்கடித்த ராகுல்காந்தி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 20 Jul, 2018 06:38 pm
will-rahul-s-wink-after-speaking-for-no-confidence-motion-be-able-break-the-record-of-priya-variar-wink

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி கண் அடித்த காட்சிகள் இணையத்தில் வைராகியுள்ளது. 

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்காக விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல்காந்தி, மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன், வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் என மோடி ஏமாற்றிவிட்டார். மோடி ஆட்சியில் மக்கள் பயனடையவில்லை தொழிலதிபர்கள்தான் பயனடைந்துள்ளனர்.

ரஃபேல் ஊழல், அமித்ஷா மகன் ஊழல் என காரசாரமாக தனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தில் கணகட்சிதமாக பேச்சை முடித்த ராகுல் வேகமாக நடந்து சென்று மோடியை அணைத்து ஃபைனல் டச் கட்டிப்பிடி வைத்தியத்துடன் எண்ட் கார்டு போட்டார். உடனே ராகுலை அழைத்து கை கொடுத்து தட்டிக் கொடுக்க மக்களவையே சிறிதுநேரம் அதிர்ந்துபோனது. இத்துடன் ராகுல்காந்தி தனது சேட்டையை முடிப்பதாக தெரியவில்லை.

தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தவுடன், ராகுல் சற்று திரும்பி மோடியை பார்த்து கண் அடித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இத்தகைய சுவாரஸ்ய நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் #NoConfidenceMotion #RahulGandhi என்ற ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வருகின்றனர். 

ராகுல்காந்தியின் கண் அடிக்கும் புகைப்படத்தை புருவ அழகி பிரியா வாரியரின் கண் அடிக்கும் புகைப்படத்துடன் இணைத்து மீம்ஸ் போட்டு  ப்ரியா வாரியரை விட நன்றாக கண் அடிக்கிறீர்கள், கட்டிப்பிடி வைத்தியம் தொடங்கி, கண் அடிப்பது வரை அனைத்து வித்தைகளிலும் ராகுல் கைத்தேர்ந்தவர் என கலாய்த்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close