பிரதமர் பொறுப்பற்ற முறையில் பேசுவது  வேதனையளிக்கிறது: சந்திரபாபு நாயுடு

  சுஜாதா   | Last Modified : 21 Jul, 2018 08:34 am
prime-minister-spoke-with-arrogance-says-chandrababu-naidu

ஒரு நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனையளிக்கிறது. மேலும் அவர் ஒரு சுயநலவாதி என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்த நிலையில், ஆந்திர மாநிலம் அமராவதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

மாநில கட்சி ஒன்று கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பிற கட்சிகள் ஆதரவளித்தது இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை. முழு ஆந்திரப் பிரதேசமும் நீதியை எதிர்பார்த்து காத்திருந்தது, ஆனால், எங்களுக்கு மீண்டும் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசிடம் பெரும்பான்மை இருந்தாலும், அவர்கள் நீதியை நிலை நாட்டவில்லை. பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் எங்களை பார்த்து சுயநலவாதிகள் என்கிறார். ஆனால், உண்மையில் அவர் தான் சுயநலவாதி. 

ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி கடந்த நான்கு ஆண்டுகளில் 29 முறை நான் டெல்லிக்கு சென்றுள்ளேன். ஆனால், ஆந்திராவிற்கு நீதி வழங்குவதற்கு பதிலாக அவர்கள், என் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். இந்த தொடர்ச்சியான மோதலின் ஒருபகுதியாகவே நாங்கள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தோம்.

ஒரு நாட்டின் பிரதமர் பதவியில் இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பேசுவது வேதனையளிக்கிறது. எங்கள் வசம் போதிய உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு அலட்சிய போக்குடன் நடந்து கொள்கிறது.

இன்று டெல்லி செல்லவிருப்பதாக தெரிவித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு என்ன வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தேசத்துக்கு விளக்குவேன்.  மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் போராட வேண்டும். அதோடு நிற்காமல் பா.ஜ.க.வை ஆதரிக்கும் கட்சிகளுக்கும் பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close