மகாராஷ்டிராவில் பா.ஜ.க தனித்துப் போட்டி; முறிகிறதா சிவசேனா கூட்டணி?

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 01:05 pm
maharashtra-bjp-raises-poll-pitch-hints-at-going-it-alone-in-2019

மகாராஷ்டிராவில் வருகிற லோக்சபா  மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிட தயாராகுங்கள் என  அம்மாநில பா.ஜ.கவினருக்கு அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை பா.ஜ.க, சிவசேனா கட்சியுடன்  கூட்டணி வைத்து தேர்தல்களில் போட்டியிட்டு வந்தது.கடந்த 2012 நாடாளுமன்றத்  தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என கூட்டணியுடன் போட்டியிட்டாலும், கடந்த தேர்தல்களில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. 

இதையடுத்து, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சிவசேனாவிடம் பா.ஜ.க ஆதரவு கோரியது. ஆதரவளிப்பதாக கூறி விட்டு, இறுதியில் சிவசேனா பின்வாங்கியது. கடந்த 20ம் தேதி நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.  இது பா.ஜ.கவுக்கு முதலில் பின்னடைவாக பார்க்கப்பட்டாலும் இறுதியில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 

இதைத்தொடர்ந்து, தற்போது மகாராஷ்டிராவில் தனித்து போட்டியிட பா.ஜ.க முடிவு செய்துள்ளது. அதன்படி, 2019 நாடாளுமன்றத் தேர்தல், வரும் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிட கட்சியின் தலைவர் அமித் ஷா முடிவு செய்துள்ளார். அவர் தனது கட்சித் தொண்டர்களிடம், "மகாராஷ்டிராவில் தனித்து போட்டியிட தயாராகுங்கள்" என முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக பா.ஜ.க - சிவசேனா கூட்டணி முறியும் சூழ்நிலையில் உள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close