25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 23 Jul, 2018 02:29 pm
candidates-older-than-25-years-will-not-be-able-to-appear-in-neet-2018-sc

25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் 2018ம் ஆண்டு நீட் தேர்வு எழுத அனுமதி இல்லை என  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 25 ஆகவும், இதர பிரிவினருக்கு 30 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றிக்கு எதிராக பல்வேறு மாணவர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே நீர் தேர்வுக்கான அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் வரும் 2018ம் ஆண்டு நீட் தேர்வு எழுத அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

source: www.newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close