ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிக்க 10 முறையாவது யோசிக்க வேண்டும் : யோகி ஆதித்யநாத்

  Newstm Desk   | Last Modified : 24 Jul, 2018 06:07 pm
rahul-gandhi-will-think-10-times-before-hugging-me-says-yogi-adityanath

ராகுல் காந்தி என்னை கட்டிப்பிடிக்க வேண்டுமென்றால் அதற்கு முன் 10 முறையாவது யோசிக்க வேண்டும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

கடந்த 20ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக பேசினார். இறுதியில் பிரதமரின் இருக்கைக்குச் சென்று அவரை கட்டியணைக்க, அதற்கு மோடியும் பதிலுக்கு கைகொடுக்க அரங்கமே அதிர்ந்தது. ராகுலின் பேச்சு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இது தொடர்பாக தற்போதும் பல்வேறு விவாதங்கள், விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.  அதில், "அரசியலில் சில விஷயங்களை எப்போதும் எந்த காரணத்திற்காகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதுபோல தான் இந்த நிகழ்வும். ராகுல் காந்தி இன்னும் வளர வேண்டும். அவர் ஒரு குழந்தை போல நடந்துகொள்கிறார். அறிவுடைய ஒருவர் இவ்வாறு நாடாளுமன்ற அவையில் கட்டியணைக்க மாட்டார். இப்படியொருவரை சில கட்சிகள் ஏன் ஆதரிக்கின்றன என தெரியவில்லை. 

பிரதமர்  மோடியை அவர் எளிதாக கட்டியணைத்துவிட்டார். ஆனால், என்னை அவ்வாறு செய்ய முடியாது. என்னை கட்டிப்பிடிப்பதற்கு முன்பாக அவர் 10 முறையாவது யோசிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close