பா.ஜ.கவை விமர்சித்தாலும்  வெறுக்க மாட்டோம்: ராகுல் காந்தி 

  சுஜாதா   | Last Modified : 26 Jul, 2018 05:56 am

i-can-fight-mr-advani-on-every-single-inch-but-i-don-t-nee-rahul-gandhi

இப்போதெல்லாம், பாஜக எம்.பி.கள் என்னை பார்த்தாலே கட்டிப்பிடித்து விடுவேனோ என்ற பயத்தில் 2 அடி பின்னால் போகிறார்கள். பிரதமரையும், பாஜகவையும் நாங்கள் விமர்சித்தாலும் அவர்களை வெறுக்க மாட்டோம்  என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, 
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மோடியை கட்டிபிடித்தது தொடர்பாக பேசினார். விழாவில் அவர் பேசியதாவது:  ‘‘இப்போதெல்லாம் பா.ஜனதா எம்.பி.க்கள் எனக்கு எதிரில் வந்தால், 2 அடி பின்னால் தள்ளி நிற்கிறார்கள். எங்கே நான் கட்டிப்பிடித்து விடுவேனோ என்று பயந்து அப்படி செய்கிறார்கள்’’ என்றார். அப்போது, பலத்த சிரிப்பொலி எழுந்தது.

ராகுல் காந்தி தொடர்ந்து பேசுகையில், ‘‘நாம் ஒருவருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கலாம். அவருடன் போரிடலாம். ஆனால், அவரை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். நாட்டைப் பற்றிய அத்வானி கருத்தும், என் கருத்தும் வேறு வேறானது. அதற்காக அவருடன் சண்டையிட்டாலும் வெறுக்க வேண்டியது இல்லை. அத்வானியை நான் கட்டிப்பிடிக்கவும் முடியும், சண்டையிடவும் முடியும்’’ என்றார்.
  
இந்நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் அத்வானியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close