ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

  சுஜாதா   | Last Modified : 26 Jul, 2018 02:33 pm
pm-narendra-modi-congratulates-president-ram-nath-kovind

ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவி ஏற்று  ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி, பிரதமர் மோடி அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.   

கடந்த ஆண்டு ஜூலை 25-ந் தேதி இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார். அவர் அப்பதவி ஏற்று ஓராண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து, தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அவருக்கு ‘ட்விட்டர்’ பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில், சிறப்பான பணி, ஞானம் மற்றும் பணிவின் மூலம் இந்தியர்களின் அன்புக்குரியவராக விளங்கி, ஓராண்டு பதவி காலத்தை நிறைவுசெய்துள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார். மேலும், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அதிகாரங்கள் கிடைப்பதற்கு ஜனாதிபதி பாடுபடுவதாகவும் அதில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close