தென்ஆப்பிரிக்கா பயணத்தை முடித்து இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி!! 

  சுஜாதா   | Last Modified : 28 Jul, 2018 08:04 am
pm-modi-arrives-india-after-brics-meeting

ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது இந்தியாவுக்கும் மேற்கண்ட இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், அக்கூட்டமைப்பில்  அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார். கடைசியாக துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்ட பிரதமர் இன்று அதிகாலை டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மலர்க் கொத்து கொடுத்து வரவேற்றார். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close