தொழிலதிபர்களோடு போஸ் கொடுக்க பயமில்லை: மோடி

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 03:08 am
not-afraid-to-be-pictured-with-industrialists-modi

நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலதிபர்களின் பங்கு மிக முக்கியம் என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அவர்களோடு சேர்ந்து நிற்பதில் தனக்கு பயமில்லை என கூறினார்.

பிரதமர் மோடியின் செயல்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானி, அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களுக்கும் சாதகமாக அமைவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், நல்ல தொழிலதிபர்களுடன் சேர்ந்து நிற்பதில் தனக்கு பயமில்லை என உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் மோடி பேசினார். 

கடந்த ஜனவரி மாதம் டாவோஸ் சர்வதேச பொருளாதார மாநாட்டில், வைர தொழிலதிபர் நிரவ் மோடியுடன், பிரதமர் மோடி சேர்ந்து நின்று எடுத்த புகைப்படம் சர்ச்சையை கிளப்பியது. சில வாரங்களுக்கு பின், பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் சர்ச்சையில் நாட்டை விட்டு வெளியேறினார் நிரவ் மோடி. அதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் மோடியை விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து அவர் பேசியபோது, "தொழிலதிபர்கள் அருகே நிற்க பயப்படுபவர்கள் நாங்கள் இல்லை. சிலர் இருக்கிறார்கள். தொழிலதிபர்களுடன் அவர்கள் இருக்கும் ஒரு புகைப்படத்தை கூட பார்க்க முடியாது. ஆனால், ரகசியமாக அவர்களை சந்தித்து குனியாத ஒரு தொழிலதிபர் கூட இருக்க மாட்டார்கள். நேர்மையான எண்ணங்கள் இருந்தால்,  இதுபோன்ற விஷயங்களுக்கு பயப்படத் தேவையில்லை. எல்லா தொழிலதிபர்களையும் திருடர்கள் என குறிப்பிடுவது தவறு. உண்மையான திருடர்கள் நாட்டை விட்டே செல்ல வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும்" என்றார் மோடி.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close