மோடி வெளிநாட்டு பயண செலவு:  காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பதிலடி தந்த பாஜக!!

  சுஜாதா   | Last Modified : 30 Jul, 2018 06:14 am

narendra-modi-foreign-visit-bjp-counter-to-congress-allegation

மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித தகுதியும் கிடையாது என்று பாஜக ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், இதற்காக அவர் அதிகம் செலவு செய்கிறார் என்றும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி  குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதத்தில் பாரதிய ஜனதா கட்சி தனது  அதிகாரபூர்வ  ட்விட்டர் பக்கத்தில்,  கூறியிருப்பதாவது: 

பிரதமர் மோடி 2014–ம் ஆண்டு முதல் 2018–ம் ஆண்டுகளில் இதுவரை 36 வெளிநாடு சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு உள்ளார். 155 நாட்கள் வெளிநாடுகளில் இருந்துள்ளார். இதற்காக ரூ.387.24 கோடி செலவிடப்பட்டு உள்ளது.

ஆனால் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2009–ம் ஆண்டு முதல் 2013–ம் ஆண்டு வரை 31 வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் 131 நாட்கள் வெளிநாடுகளில் தங்கி இருந்தார். இதன் மூலம் ரூ.386.35 கோடி செலவிடப்பட்டது.

மோடியை விட குறைந்த வெளிநாடு பயணம் மற்றும் குறைவான நாட்கள் மன்மோகன் சிங் தங்கி இருந்த போதும், ஏறக்குறைய அதே அளவிலான தொகை செலவிடப்பட்டு உள்ளது. எனவே மோடியின் வெளிநாடு பயண செலவு குறித்து பேச காங்கிரசுக்கு தகுதி கிடையாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.