மோடி ஒன்றும் மகாத்மா காந்தி அல்ல: பிரதமர் பேச்சுக்கு காங்கிரஸ் பாய்ச்சல் 

  Newstm Desk   | Last Modified : 30 Jul, 2018 11:40 am

congress-hits-back-at-pm-modi-over-industrialists-remark

தனது கொள்கையில் தெளிவாக இருந்ததனால், பிர்லா குடும்பத்துடன் பழகுவதில் காந்தி தயக்கம் காட்டவில்லை அது போல தான் தானும் என்று பேசிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது விவாதத்தில் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஊழலில் ஈடுபடும் நாட்டின் முன்னனி தொழிலதிபர்களுடன் பிரதமர் மோடி நட்பு வைத்துள்ளதாகவும் அவர்களுக்கு ஆதாயம் தரவே மூட்டி செயல்படுவதாகவும் தெரிவித்தார். 

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  60,000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 81 திட்டப்பணிகளின் அடிக்கல் நாட்டு விழாவில் முன்னனி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். ஆதித்யா பிர்பா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அதானி குழு தலைவர் கவுதம் அதானி, எஸ்ஸெல் குழு தலைவ சுபாஷ் சந்திரா, ஐடிசி முதன்மை இயக்குனர் சஞ்சீவ் பூரி ஆகியோர் நிகழ்சியில் கலந்து கொண்டனர்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, ''தொழிலதிபர்களுடன் இருப்பதற்கு நான் எப்போதும் அஞ்சவில்லை. என்னுடைய நிலையில் நான் தெளிவாகவே உள்ளேன். பொது வெளியில் அவர்களை சந்திக்க இயலாது. தனிப்பட்ட முறையில் தான் சந்திக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தொழிலதிபர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அப்படிப்பட்ட அவர்களை ஏன் இழிவுபடுத்த வேண்டும். அவர்கள் திருடர்கள் இல்லை. அவர்களோடு பழக ஏன் யோசிக்க வேண்டும்.

மகாத்மா காந்தி தனது கொள்கை மீது பிடிப்புக் கொண்டிருந்தார். அதனால் அவர் பிர்லா போன்ற தொழிலதிபர் குடும்பங்களோடு பழகுவதில் தயக்கமே காட்டியது இல்லை. அது போல தான் நானும். '' என்று கேள்வி எழுப்பினார்.

இதனிடையே பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் தரப்புக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து மனிஷ் திவாறி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், "நாட்டின் வளங்களை தனக்கு தேவையான நண்பர்களுக்கு விருப்பப்பட்ட விலைக்கு அளித்து நாட்டுக்கு பேரிழப்பு ஏற்படுத்துபவர் தான் மோடி. அவர் தன்னை தேசத் தந்தை மகாத்மா காந்தியோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது " என்று தெரிவித்துள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close