சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு: சசி தரூர் வெளிநாடு செல்ல அனுமதி!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 05:19 pm

sunanda-case-court-allows-shashi-tharoor-to-travel-abroad

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சட்டப்பட்ட சசிதரூர் வெளிநாடு செல்வதற்கு டெல்லி பட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மத்திய முன்னாள் அமைச்சரும், தற்போது மாநிலங்களவை எம்.பியுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசி தரூர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அவருக்கு டெல்லி போலீசார் நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பிஇருந்தனர். விசாரணையின் போது கைது செய்யப்படலாம் என்று கருதி,  சசி தரூர் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவர் வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து வெளிநாடு செல்ல அனுமதி கோரி டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். டெல்லி பட்டியாலா நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியதுடன் இன்றைய விசாரணையில் அவர் வெளிநாடு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிணைத்தொகையாக ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close