ஒதுங்கும் சோனியா காந்தி... ஓங்கும் ப்ரியங்கா காந்தி: ராகுலுக்கு செக்!?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 06 Aug, 2018 04:39 am

sonia-gandhi-absent-from-top-congress-leadership-body-meeting

வரும் மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்திக்குப் பதிலாக அவரது மகள் பிரியங்கா வதேரா வேட்பாளராக நியமிக்கப்படுவார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார் எனக்கூறப்படுகிறது. 

அதேவேளை, சோனியா காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார். நேற்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திலும் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் சோனியா தற்போது போட்டியிட்டு வரும் ரேபரேலி தொகுதியில் அவருக்குப் பதிலாக அவருடைய மகள் பிரியங்கா வதோராவை காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனியா காந்தி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் தெரிகிறது.

கடந்த முறை அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் சோனியா மற்றும் ராகுல் காந்திக்காக பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலிலேயே பிரியங்கா போட்டியிட வேண்டும் என்றும், அவரை கட்சியில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் பலமாக எழுந்தன. ஆனால், அந்தத் தேர்தலில் பிரியங்கா போட்டியிடாத நிலையில், தற்போது சோனியாவின் தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஒரு தரப்பினர் ப்ரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close