இனி பெங்களூரில் ஏர் ஷோ கிடையாதா? பொங்கும் கன்னட அரசியல்வாதிகள்

  Newstm Desk   | Last Modified : 06 Aug, 2018 04:43 am
no-more-air-show-in-bengaluru

20 வருடங்களுக்கும் மேலாக பெங்களூரில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியை, வேறு மாநிலத்திற்கு மாற்ற வாய்ப்பு இருப்பதால், மத்திய அரசை கர்நாடக மாநில அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் பெங்களூரு விமான கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அரசு மற்றும் தனியார் விமான நிறுவனங்கள், ஆய்வு கூடங்கள் அங்கு அமைந்திருப்பதால், விமான கண்காட்சி நடத்த பெங்களூரு முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்த ஆண்டுக்கு பிறகு, வேறு மாநிலத்திற்கு 'ஏரோ இந்தியா' எனப்படும் விமான கண்காட்சித் மாற்றப்படும் என கூறப்படுகிறது. 

2019ம் ஆண்டிற்கு பின்னர், விமான கண்காட்சியை எங்கு நடத்துவது என இன்னும் முடிவெடுக்கவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதை லக்னோவில் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை வைத்து மத்திய அரசு அரசியல் செய்வதாக கர்நாடக கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

இதுகுறித்து பேசிய கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா கூறியபோது "விமான கண்காட்சியை பெங்களூரில் இருந்து லக்னோவிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பது மிகவும் மோசமான முடிவாகும். 1996 முதல் வெற்றகரமாக கண்காட்சியை நடத்தி வருகிறோம். ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புத்துறையில் பெங்களூரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது" என்றார். காங்கிரஸ், கட்சியை சேர்ந்த பல தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close